சினிமாவில் அறிமுகமாகும் சூர்யா-கார்த்தியின் தங்கை

சினிமாவில் அறிமுகமாகும் சூர்யா-கார்த்தியின் தங்கை

சூர்யா, கார்த்தியின் தங்கையும் சிவகுமாரின் மகளுமான பிருந்தா, சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகையாக அறிமுகமாகாமல், பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கவுதம் கார்த்திக், கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் சூர்யா, கார்த்தியின் தங்கை பிருந்தா பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டு, என் தங்கை பிருந்தா இப்படத்தில் பாடியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். அதுபோல் நடிகர் சிவகுமார், ஒரு வாழ்த்து மடலை அனுப்பி வைத்திருந்தார்.

விழாவில் கலந்துக் கொள்ளாத கார்த்தி, தனது டுவிட்டரில், ‘நான் எப்போதும் என் தங்கை பிருந்தாவுடன் விளையாடிக்கொண்டே இருப்பேன். ஆனால், எனக்கு இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் தங்கை அதிகாரப்பூர்வமான பாடகியாக மாறியிருக்கிறார். இதற்கு காரணமான தயாரிப்பாளர் தனஞ்செயன், இசையமைப்பாளர் சாம், இயக்குனர் திரு ஆகியோருக்கு பெரிய நன்றிகள். மிஸ்டர் சந்திரமௌலி வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply