தமிழ் சினிமாவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல சூர்யாவின் புதிய முயற்சி
கோலிவுட் திரையுலகில் வெளியாகும் திரைப்படங்கள் உடனுக்குடன் திருட்டு விசிடி மூலம் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை அவ்வபோது பார்த்து வருகிறோம். மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக இணையதளங்களிலும் புதிய படங்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இத்தகையை சட்டமீறல்களை தவிர்க்க படங்கள் வெளியாகி ஒருசில குறிப்பிட்ட நாட்கள் கழித்து அதிகாரபூர்வமாகவே தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் ஹீரோ டாக்கீஸ் என்ற இணையதளம் புதிய திரைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
தமிழ்ப்படங்கள் ரிலீஸாகாத நாடுகளிலும், திரையரங்குகளுக்கு சென்று பார்க்க முடியாத ரசிகர்களுக்கும் இந்த ஹீரோ டாக்கீஸ் உறுதுணையாக இருந்து வரும் நிலையில் இந்த இணையதளத்தில் பிரபல நடிகர் சூர்யா, தற்போது முதலீடு செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் உலக ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டு செல்லும் சூர்யாவின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Chennai Today News: Surya announce to association with hero talkies to take Cinema to world audience legally!