டிசம்பர் 16-ல் சூர்யாவின் ‘எஸ் 3’ ரிலீஸ் செய்ய என்ன காரணம்?

டிசம்பர் 16-ல் சூர்யாவின் ‘எஸ் 3’ ரிலீஸ் செய்ய என்ன காரணம்?

4சூர்யா நடித்து வரும் ‘எஸ் 3’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்களின் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி இந்த படம் ரிலீஸ் ஆவதால் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

Leave a Reply