லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜின் கணவரும் மகளும். திடுக்கிடும் தகவல்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவராக கூறப்படும் லலித் மோடிக்கு 22 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்ததாக சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுசல் ஒப்புக்கொண்டுள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சுஷ்மா ஸ்வராஜின் மகளும் 9 ஆண்டுகள் லலிதமோடிக்காக பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுஷ்மா ஸ்வராஜினி குடும்பமே லலித் மோடிக்காக பல வருடங்கள் பணிபுரிந்துள்ளதாக கூறப்படும் தகவலால் நடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக இருந்து வரும் லலித்மோடிக்கும் அவருடைய மனைவிக்கும் போர்த்துகீசிய விசா வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கிலாந்து அரசுக்கு பரிந்துரை செய்ததாக வந்த தகவலால் நாடும் முழுவதும் பெரும் பரபரப்பு அடைந்து வரும் நிலையில், சுஷ்மா ஸ்வராஜின் கணவரும், மகளும் அவருக்காக பல ஆண்டுகள் பணிபுரிந்ததாக வெளிவந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு சுஷ்மா ஸ்வராஜை எதிர்த்து கண்டனக்குரல் கொடுத்து வருகின்றன. அவர் பதவி விலக வேண்டும், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜின் கணவர் விளக்கமளித்த போது, ““நான் லலித் மோடியின் வழக்கறிஞராகவும், சட்ட ஆலோசகராவும் இருந்தேன். நான் லலித் மோடியின் வழக்கறிஞராக கடந்த 22 ஆண்டுகளாகப் பணியேற்றினேன். நான் தங்கிய ஹோட்டல் அறைக்கான கட்டணம் ஐ.பி.எல். கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.
அவரிடம் ஹோட்டலில் பி.சி.சி.ஐ. அல்லது ஐ.பி.எல். தொடர்பான பணிகளுக்காக சென்றீர்களா என்று கேள்வி எழுப்பட்டதற்கு அவர் பதில் அளிக்கையில், “நான் லலித் மோடியின் ஆலோசகர், நான் எப்போதுமே கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியே இருந்தேன்” என்று கவுசல் பதிலளித்துள்ளார்.