சுஷ்மா சென்ற விமானம் 14 நிமிடம் திடீர் மாயம்: அலறிய மத்திய அரசு

சுஷ்மா சென்ற விமானம் 14 நிமிடம் திடீர் மாயம்: அலறிய மத்திய அரசு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடன் தகவ ல்தொடர்பை 14 நிமிடங்கள் திடீரென இழந்ததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று கிளம்பினார். நேற்று மதியம் 2.08க்கு திருவனந்தபுரத்தில் இருந்து, விவிஐபி விமானம் ‘மேக்தூத்’ மூலம் மொரிஷியஸ் புறப்பட்டார். முன்னதாக டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் திருவனந்தபுரம், மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று இடங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 4.44 மணிக்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சுஷ்மா விமானம் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் விமான நிலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது.

சர்வதேச விமானக் கட்டுப்பாட்டு விதிகளின் படி, விமானம் தகவல் தொடர்பை இழந்து, 30 நிமிடங்களைக் கடந்தால், அந்த விமானம் காணாமல் போனதாக அறிவிக்க வேண்டும். இதன் காரணமாக மொரிஷியஸ் விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தகவல் தொடர்பிற்கு காத்திருந்தனர். விமானம் 14 நிமிடங்களாக தகவல் தொடர்பில் இல்லாததால், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின் படி, ’INCERFA’ எனப்படும் முதல் அபாயக்கட்ட எச்சரிக்கையை மொரிஷியஸ் அறிவித்தது. பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கையில், 14 நிமிடங்கள் நிறைவடையும் தருவாயில் சரியாக 4.58 மணிக்கு தகவல் தொடர்பு எல்லைக்குள் விமானம் வந்தது. இதனால் மொரிஷியஸ் விமானத்துதுறை அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பின்னர் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த தகவல் ஏர் இந்தியா போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply