பார்சிலோனாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 13 பேர் பலி

பார்சிலோனாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 13 பேர் பலி

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஸ்பெயினின் புகழ்பெற்ற பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் வேன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் லாஸ் ராம்ப்ளாஸ்கில், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் வேகமாக புகுந்த ஒரு வேன், அங்கிருந்த மக்கள் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது.

இதை பயங்கரவாதிகள் தான் திட்டமிட்டு செய்திருக்கலாம் என தெரிகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது, “அந்த வேன் வேண்டுமென்றே மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் வேகமாக வந்ததாக தெரிவிக்கின்றனர்.”

அங்கிருந்து வரும் தகவலின் படி, வேன் மூலம் மக்கள் அதிகமாக உள்ள பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஒரு மதுபான விடுதியில் ஒன்று அல்லது இரண்டு ஆயுதத்துடன் கூடிய பயங்கரவாதிகள் ஒளிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பார்சிலோனாவில் இருக்கும் அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply