ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார்

president wifeஇந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மனைவி சுவ்ரா முகர்ஜி இன்று காலை 10.51 மணிக்கு காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிப்படைந்திருந்த சுவ்ரா முகர்ஜி டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமானதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அவர் சிகிச்சை பெற்று வந்த டெல்லி மருத்துவமனை மருத்துவர்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். சவ்ரா முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அமீத்அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்கள், மாநில முதல்–மந்திரிகள், கவர்னர்கள் இரங்கல் தெரிவித்து அனுதாப செய்தி வெளியிட்டுள்ளனர்.

சவ்ரா முகர்ஜி 1940–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந்தேதி வங்காளதேசத்தில் நரைல் என்ற இடத்தில் பிறந்தார். 10 வயதில் அவரது குடும்பம் வங்காளதேசத்தில் இருந்து கொல்கத்தாவில் இடம் பெயர்ந்தது. இங்கு படித்து பட்டம் பெற்றார். 1957–ம் ஆண்டு ஜூலை மாதம் 13–ந்தேதி பிரணாப் முகர்ஜிக்கும், சவ்ரா முகர்ஜிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன் அபிஜித் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.

மற்றொரு மகன் பெயர் இந்திரஜித், மகள் ஷார் மிஸ்தா சிறந்த ஒடிசி நடன கலைஞரான இவர் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

 

Leave a Reply