கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு காய்கறி கிடையாது. ஒரு கிராமத்தின் வினோத சட்டம்

கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு காய்கறி கிடையாது. ஒரு கிராமத்தின் வினோத சட்டம்
village
கழிப்பறைகளின் அவசியத்தை நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் ம.பி. மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு காய்கறி கிடையாது என்ற புதிய கட்டுப்பாட்டினை கொண்டு வந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரட்லம் மாவட்டத்தில் புத்தேடா என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாரத பிரதமரின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய ‘தூய்மை இந்தியா’ திட்டம் மிகவும் தீவிரமாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை அந்த கிராமத்தில் 100 சதவீதம் வெற்றி அடைய செய்ய அந்த கிராமத்தில் உள்ள நிர்வாகிகள் ஒருசில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதாவது கழிப்பறை இல்லாத வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த கிராமத்தில் உள்ள எந்த  கடைகளிலும் காய்கறி விற்பனை செய்ய கூடாது என்றும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு சலூன் கடையில் தலைமுடி திருத்தம் செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.

புத்தேடா கிராமத்தில் ஒரே ஒரு சலூன் கடை மட்டுமே வைத்துள்ள கடை உரிமையாளர் அமர் லால் சென் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘வீட்டில் கழிப்பறை கட்டாமல் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நான் முடிதிருத்தம் செய்வது இல்லை. கழிப்பறை கட்டிய பிறகு அவர்களுக்கு முதல்முறை மட்டும் இலவசமாக முடிதிருத்துவேன் என்று கூறினார். அதேபோல் புத்தேடா கிராம காய்கறி வியாபாரி திருபாய் கூறியபோது, கழிப்பறை இல்லாதவர்களுக்கு காய்கறி விற்கப்படாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளேன் என்று கூறினார். இந்த கண்டிப்பான கட்டுப்பாடுகளால் இதுவரை கழிப்பறை இல்லாத சில வீடுகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் பாரத் மாளவியா உதவியுடன் கழிப்பறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply