தூய்மை இந்தியா திட்டம்: டாப் 50 இடங்களில் 3 இடத்தை பிடித்த தமிழக நகரங்கள்

தூய்மை இந்தியா திட்டம்: டாப் 50 இடங்களில் 3 இடத்தை பிடித்த தமிழக நகரங்கள்

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் டாப்-50 இடங்கள் பெற்ற நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் தலைநகரான சென்னை இல்லாவிடினும், திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்கள் இடம்பெற்று மானத்தை காப்பாற்றியுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான சிறந்த தூய்மையான நகரமாக, ‘இந்தூர்’ நகரமும், மிகவும் மோசமான நகரமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ’கொண்டா’ நகரம் பட்டியலின் கடைசி இடத்திலும் உள்ளது.

கடந்த 2014–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி, இதை விளம்பரப்படுத்த அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தூதர்களாகவும் நியமித்தார். மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், மாநில அரசுகளால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் டாப் 10 பட்டியலில் தமிழகத்தின் திருச்சி 6 வது இடத்திலும் டாப் 50 நகரங்களில் கோவை நகரம் 16 வது இடத்திலும், கும்பகோணம் 37வது இடத்திலும் மற்றும் ஈரோடு 42வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை எப்போது இடம்பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply