கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று கும்பிடக்கூடாது. கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்றுதான் வணங்கவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி எனக் காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.
அன்னையின் கடைக்கண் பார்வை பட்டால் செல்வம், கல்வி, ஒருநாளும் தளர்வறியா மனம், தெய்வ வடிவம், வஞ்சமில்லா நண்பர்கள், நல்லன எல்லாம் கிடைக்கும் என அபிராமிப்பட்டர் கூறியுள்ளார்.
(மூலவருக்கு முன்பு நிற்கும்போது மற்ற அடியார்கள் மூலவரைத்தரிசிக்கவிடாமல்த் தடுக்கும் பாவத்தை நாம் செய்கின்றோம்)