ரகுராம் ராஜனை அடுத்து சுவாமியின் கடைக்கண் பார்வை திரும்பியது யார் பக்கம் தெரியுமா?

ரகுராம் ராஜனை அடுத்து சுவாமியின் கடைக்கண் பார்வை திரும்பியது யார் பக்கம் தெரியுமா?
swamy
இந்திய ரிசர்வ் வங்கியைன் கவர்னர் ரகுராம்ராஜனை கடந்த சில நாட்களாக குறி வைத்து தாக்கி கொண்டிருந்தார் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இவருடைய நெருக்குதலால் தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கல்விப்பணிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாகவும் ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டார்

இதனையடுத்து தற்போது சுப்பிரமணியன் சுவாமியின் கடைக்கண் பார்வை தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் மீது திரும்பியுள்ளது. அர்விந்த் சுப்பிரமணியன் அடுத்த ஆர்பிஐ கவர்னராவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் மீதும் சரமாரியான புகார்களை சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதோ
சுவாமியின் ட்வீட்கள்:

ட்வீட் 1:

அமெரிக்க மருந்து உற்பத்தி, விற்பனை துறை நலனைப் பேண வேண்டுமானால் இந்தியாவுக்கு எதிராக சில முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை கூறியது யார் தெரியுமா? அர்விந்த் சுப்பிரமணியன் (தற்போதைய தலைமை பொருளாதார ஆலோசகர்) அவரை நீக்குங்கள்!

ட்வீட் 2:

ஜிஎஸ்டி-க்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் இவ்வளவு நெருக்கடி தர ஊக்குவித்தது யார் தெரியுமா? அது ஜேட்லியின் ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன்- வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்தவர்.

இவ்வாறாக அர்விந்த் சுப்பிரமணியத்துக்கு எதிராகவும் சுவாமி டுவீட்களை பதிவு செய்து வருவதால் அர்விந்த் சுப்பிரமணியன் அவர்களுக்கு அடுத்த ஆர்பிஐ கவர்னர் கிடைக்குமா என்பது கேள்க்குறியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சுவாமியின் டுவிட்டுக்கு எதிர் டுவீட்டுக்களும் பதிவு செய்த்ள்ளது. இதோ அந்த டுவீட்: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, “தற்போது ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சன வட்டத்துக்குள் சிக்கியிருக்கிறார் அர்விந்த் சுப்பிரமணியன். ஆனால் உண்மையாக குறிவைக்கப்பட்டுள்ளவர் அருண் ஜேட்லியே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply