சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாதவருக்கு முதல்வர் பதவி தேவையா? சுவாமி விளாசல்
சமீபத்தில் உபி யில் நடந்த இரண்டு பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று ராஜினாமா செய்த தொகுதியான கோரக்பூர் தொகுதியின் தோல்வியை பாஜகவினர்களால் ஜீரணித்து கொள்ளவே முடிகிறது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ‘தனது சொந்த தொகுதியில் பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுவாமியின் இந்த டுவீட் பாஜகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு எதிரான கருத்துக்களை கூறி சுவாமி பரபரப்பை ஏறப்டுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது
Swamy advice to bjp why cm post to yogi