உடைந்தது ஆம் ஆத்மி. தோன்றியது புதிய கட்சி ‘ஸ்வராஜ் இந்தியா’
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடது வகையாகவும், வலது கையாகவும் இருந்த யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக முதல்வருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஸ்வராஜ் இந்தியா என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். இதனால் ஆம் ஆத்மி உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே மத்திய அரசு, டெல்லி அரசுக்கு கொடுக்கும் பிரச்சனைகளை சந்தித்து வரும் கெஜ்ரிவாலுக்கு உட்கட்சியில் ஆரம்பித்துள்ள இந்த விரிசல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் தொடங்கியுள்ள இந்த கட்சி ஆம் ஆத்மிக்கு கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் நடத்தி வரும் ஸ்வராஜ் அபியான் இயக்கம் தனித்து இயங்கும் என்றும் கூறப்படுகிறது.