சென்னை ஐகோர்ட் அதிரடியால் சுவாதி வழக்கு மாநில காவல்துறைக்கு மாற்றம்.
நுங்கம்பாக்கம் சுவாதி கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதில் மாநில காவல் துறைக்கும் ரயில்வே காவல்துறைக்கும் இடையே எழுந்த குழப்பம் காரணமாக சென்னை ஐகோர்ட் தாங்களாகவே அதை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் இரு காவல்துறைகளுக்கு இடையே விசாரணை ஒருங்கிணைப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு சென்னை ஐகோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சுவாதி கொலை வழக்கு விசாரணை மாநில காவல்துறைக்கு அதவது சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட தகவலை ரயில்வே டிஐஜி பாஸ்கரனும் உறுதி செய்துள்ளார்.
எனினும் கொலைகாரன் குறித்து இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை என்றும் கொலைகாரனை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருவதாகவும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன. ஆனால் கொலைகாரனை இன்னும் ஒருசில நாட்களூக்குள் பிடித்துவிடுவோம் என சென்னை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.