சுவாதி கொலை வழக்கின் அடையாள அணிவகுப்பில் நடந்தது என்ன? நீதிபதி பேட்டி
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை ராம்குமார் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளியை அடையாளம் காணும் அணிவகுப்பு நேற்று புழல் சிறையில் நடைபெற்றது. இந்த அடையாள அணிவகுப்பு மூத்த சிவில் நீதிபதியும், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுமான ஆர்.சங்கர் முன்னிலையில் நடந்தது.
அடையாள அணி வகுப்பிற்கு பின்னர் நீதிபதி சங்கர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “சுவாதி கொலை வழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்பு விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. யார் யாரிடம் விசாரணை நடைபெற்றது என்ற விவரங்களை வெளியிட முடியாது” என்று கூறினார்.
இந்த அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷ்ணன், கொலையை நேரில் பார்த்த பெட்டிக்கடை சிவக்குமார் ஆகியோர் அடையாளம் காட்டினர். ஆனால் ராம்குமாரைத்தான் காட்டினார்களா? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.