ஓவியாவுக்கு ஓட்டு போடுங்க: இது ஒரு ஸ்விட் கடையின் விளம்பரம்

ஓவியாவுக்கு ஓட்டு போடுங்க: இது ஒரு ஸ்விட் கடையின் விளம்பரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கின்றதோ, விஜய் டிவிக்கு எந்த அளவுக்கு டி,ஆர்.பி ஏறியிருக்கின்றதோ தெரியாது, ஆனால் இந்த நிகழ்ச்சியால் ஓவியா, லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்.

ஓவியாவை ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்கின்றனர். ஆனால் சளைக்காமல் ஓவியாவுக்கு ஓட்டு போட்டு அதுவும் கிட்டத்தட்ட 80% ஓட்டு போட்டு ஓவியா ஆர்மியினர் அவரை காப்பாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி குடும்பத்தலைவிகள் முதல் சிறுவர்கள் வரை எங்கும் எதிலும் ஓவியா பேச்சுதான்

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் பில்லின் கீழே ஓவியாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ளது. எந்த அளவுக்கு ஓவியாவுக்கு திடீர் புகழ் கிடைத்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று இல்லை

Leave a Reply