70 வயதில் 2 கைகளையும் கட்டிக் கொண்டு நீச்சல்! பாட்டியின் சாதனை!

ஆபீரா என்ற 70வயது மூதாட்டி கேரளாவில் உள்ள வீ.கே. குன்னம் புரத்தில் வசித்து வருகிறார். இளம் வயதில் இருந்தே இவருக்கு நீச்சல் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது.

அதிலும் பிரத்யேகமாக கைகளை கயிறால் கட்டியபடி நீச்சல் பயிற்சி பெற்று வந்த ஆரிபா, அதனை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டியுள்ளார்.

பெரியாறு ஆற்றில் 780 மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் நீந்தி கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.