சுவிட்சர்லாந்து நாட்டின் போர் விமானம் திடீர் மாயம்.
சென்னையில் இருந்து கிளம்பிய இந்திய ராணுவத்திற்கு சொந்தமான விமான ஒன்று சமீபத்தில் திடீரென மாயமானது குறித்த தகவல் எதுவும் இதுவரை தெரியாத நிலையில் இதே போன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ராணுவத்திற்கு சொந்தனான F/A-18C ரக ஜெட் போர் விமானம் ஒன்று திடீரென மாயமாகிவிட்டது. நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் மத்திய சுவிட்சர்லாந்து பகுதியில் உள்ள சுஸ்டென் என்ற இடத்தின் அருகாமையில் நேற்றிரவு சுமார் 7.35 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
ஒரே ஒருவர் மட்டுமே அமர்ந்துசெல்லக்கூடிய இந்த விமானம் பனிபடர்ந்த ஆல்பைன் மலைப்பகுதியில் திடீரென மாயமனதால் விமானத்தையும், அதிலிருந்த விமானியையும் தேடும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. தரைவழியாகவும், வான் வழியாகவும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
எனினும், ஆல்பைன் மலைத்தொடர் பகுதியில் நிலவிவரும் மோசமான வானிலையால் தேடுதல் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விமானத்தில் சென்றவர் உயிருடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பிரார்த்தித்து வருவதாகவும் சுவிட்சர்லாந்து நாட்டின் விமனப்படை தளபதி ஆல்டோ ஸ்கெல்லென்பெர்க் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளா