வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் தகவல்களை சர்வதேச ஒப்பந்த விதிகளை காரணம் காட்டி அந்நாடு இந்தியாவிற்கு தர மறுத்துள்ளது.
இன்று சுவிஸ் அரசு தெரிவித்துள்ள ஒரு அறிக்கையில் சர்வதேச ஒப்பந்த விதிகளின்படி சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்ற விதிகள் இல்லை. எனவே இந்த விஷயத்தில் இந்திய அரசுக்கு உதவ முடியாது என சுவிஸ் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜெர்மன் வங்கியில் பணம் டெபாசிட் செய்த இந்தியர்களின் விபரங்களை மூடி சீலிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இந்திய அரசு சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்களை திரட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சுவிஸ் வங்கிகளுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே தர்மசங்கடமான ஒரு சூழலை இந்திய அரசு சந்தித்து பரிதாபமான நிலையில் உள்ளது.