அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 14இன்ச் நீளமான வாள் ஒன்றை வாய் வழியே உள்ளே நுழைத்து திடுக்கிடும் சாகசம் ஒன்றை செய்துள்ளார். இவர் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1Ew5Ag7″ standard=”http://www.youtube.com/v/RJI0sh-Ltq0?fs=1″ vars=”ytid=RJI0sh-Ltq0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep6446″ /]
அமெரிக்காவை சேர்ந்த டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 27 வயது வயது வெரோனிக்கா ஹெர்னாண்டஸ் என்ற இளம்பெண் சிறுவயதில் இருந்தே கத்தி, வாள் ஆகியவற்றை வாய்வழியே உள்ளே நுழைத்து செய்யும் சாகசத்தை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணமாகி தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். இருப்பினும் அவர் தனது சாகசத்தை தொடர்ந்து செய்து வருகிறார்.
சமீபத்தில் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பில் இவர் 14இன்ச் நீளமுள்ளை வாள் ஒன்றை முழுதாக் வாய்க்குள் நுழைத்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். இந்த சாகச வீடியோ தற்போது உலகம் முழுவதும் இண்டர்நெட்டிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.