சிரியாவில் இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல். 31 பேர் பலி

சிரியாவில் இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல். 31 பேர் பலி

syriaஈராக் மற்றும் சிரியா நாடுகளில் கடந்த பல வருடங்களாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று வடகிழக்கு சிரியாவில் உள்ள காமிஷ்லி என்ற நகரில் உள்ள குர்திஷ் போராளிகளின் தலைமை முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பயங்கர வெடிகுண்டுகள் நிறைந்த லாரியில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் லாரியை தலைமை முகாம் மீது மோதவிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேபோல், இங்குள்ள சோதனைச்சாவடியின் நுழைவு வாயிலில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

இரு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக தெரியவந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாகவும், படுகாயம் அடைந்த சுமார் 170 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உயிர்களை காப்பாற்ற ரத்ததானம் செய்ய முன்வரும்படி காமிஷ்லி நகரம் அமைந்துள்ள ஹசாகே மாகாண கவர்னர் கேட்டு கொண்டுள்ளார்.

Leave a Reply