நடிகர் சிம்பு திருமணம் எப்போது என்பது குறித்து இயக்குனர் டி ராஜேந்தர் அவர்கள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இன்று இயக்குனர் டி ராஜேந்தர் காஞ்சிபுரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட, என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட, இறைவன் தான் சரியான பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்
என்னை யார் பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள் கடவுளின் அருளால் சீக்கிரமே என் மகன் சிம்புவுக்கு திருமணம் நடக்கும் என்று கூறினார்
இதனை அடுத்து சிம்புவின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது