20-20 உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா சாம்பியன்

820-20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

உலகக்கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் இன்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள நிலையில், மகளிர் 20-20 உலகக்கோப்பையின் இறுதியாட்டமும் இன்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துஅணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. நைட்29 ரன்காள் எடுத்தார். பின்னர் 106 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 106 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply