T20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. இந்திய வீரர்கள் அறிவிப்பு
20 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் மாதம் 6ஆம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணியும் கலந்துகொள்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
தோனி (கேப்டன்)
ரோஹித் சர்மா
ஷிகர் தவண்
விராட் கோலி
ரஹானே
சுரேஷ் ரெய்னா
யுவராஜ் சிங்
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
அஸ்வின்
பும்ரா
ஆஷிஷ் நேஹ்ரா
ஹர்பஜன் சிங்
முகமது சமி
பவன் நேகி