நடிகை தபுவுக்கு திடீர் மூச்சுத்திணறல். காஷ்மீர் மருத்துவமனையில் அனுமதி.

காதல் தேசம், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, ஆகிய படங்களில் நடித்த நடிகை தபு தற்போது ஹெய்டர் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீர் மலைப்பகுதியில் மிகவும் குளிரான பகுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென நடிகை தபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு குழு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தபுவை Sher-e-Kashmir Institute of Medical Sciences என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிக குளிரான பகுதியில் தொடர்ச்சியாக பலமணி நேரம் படப்பிடிப்பு இருந்ததால் தபுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக அவருக்கு ஓய்வு தேவை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் தபு ஓய்வு எடுக்க செல்லாமல், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply