எகிப்து நாட்டில் தாகூரின் 155வது பிறந்தநாள் விழா கோலாகலம்.

எகிப்து நாட்டில் தாகூரின் 155வது பிறந்தநாள் விழா கோலாகலம்.
tagore
நோபல் பரிசுபெற்றவரும், தேசிய கீதத்தை எழுதியவருமான புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1878 மற்றும் 1926ஆம் ஆண்டுகளில் எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். எகிப்தின் புகழ்மிக்க கவிஞர் அகமது ஷாவியுடன் தாகூர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தாகூருக்கும் எகிப்திற்கும் நெருக்கமாக பந்தம் இருந்து வந்தது. மேலும் தாகூரின் 150வது பிறந்த நாள் அன்று அவரது திருவுருவச் சிலை எகிப்தில் கடந்த 2012ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், தாகூரின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு எகிப்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கலாசாரப் பிரிவு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தாகூரின் பிறந்தநாளான நேற்று முதல் அந்த நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. தாகூரின் ஓவிய கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை எகிப்த் நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா நேற்று தொடங்கி வைத்தார்.  எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் 12-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Leave a Reply