ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பதக்கத்தை திருடிய பிரபல பாடகர் கைது

ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பதக்கத்தை திருடிய பிரபல பாடகர் கைது

1வங்காள எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் கடந்த 1931ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்காக அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

நோபல் பதக்கம், நோபல் பரிசுடன் அளிக்கப்பட்ட பணம், தாகூர் பயன்படுத்திய கடிகாரம், பிரேஸ்லெட் ஆகியவை அவரது நினைவாக கொல்கத்தா விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் உள்ள சாந்திநிகேதன் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் தாகூரின் நோபல் பதக்கம் உள்பட பல அரிய பொருட்கள் கடந்த 2004ஆம் ஆண்டு திருடுபோனது. இந்த வழக்கை ஆறு வருடங்களாக விசாரணை செய்து வந்த சிபிஐ, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கை 2010ஆம் ஆண்டு கைவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் காவல்துறையின் விசாரணையில் பாடகர் ப்ரித்வி பௌரி நேற்று கைது செய்யப்பட்டார். அவர்தான் தாகூரின் நோபல் பதக்கத்தை திருடியவர் என்பதற்கான ஆதாரம் இருப்பதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply