‘கபாலி’ டப்பிங்கிற்காக சென்னை வந்த தைவான் வில்லன் நடிகர்

‘கபாலி’ டப்பிங்கிற்காக சென்னை வந்த தைவான் வில்லன் நடிகர்
kabali
‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘கபாலி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ரஜினிகாந்த், தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்பட இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் தங்கள் பகுதிகளின் டப்பிங் பணியை ஏற்கனவே முடித்துவிட்டனர்.

மேலும் இந்த படத்தின் மெயின் வில்லனாக நடித்த தைவான் நடிகர் Winston Chao என்பவர் நேற்று இந்த படத்தின் டப்பிங் பணிக்காக சென்னை வந்துள்ளார். தனது பகுதியின் டப்பிங்கை வேறு யாரையும் வைத்து முடித்துவிட வேண்டாம். நானே டப்பிங் செய்கிறேன் என்று இயக்குனர் ரஞ்சித்திடம் ஏற்கனவே அவர் கூறியிருந்தாராம். அவருடைய ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இந்த அழைப்பை ஏற்று நேற்று சென்னை வந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

Winston Chao தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை இன்று தொடங்கி இரு நாட்களில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உறுதி செய்துள்ளார்.

Leave a Reply