விமானத்தில் குழந்தை பெற்ற சீனப்பெண்ணுக்கு ரூ.21 லட்சம் அபராதம்?

taivanவிமானத்தில் குழந்தை பெற்ற சீனப்பெண்ணுக்கு ரூ.21 லட்சம் அபராதம்?

அமெரிக்க எல்லையில் விமானத்தில் பயணம் செய்யும்போது குழந்தை பெற்றால் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என திட்டமிட்டு விமான பயணத்தின்போது குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரூ.21 லட்சம் அபராதம் விதிக்கவுள்ளது.

கடந்த 8-ம் தேதி சீனாவைச் சேர்ந்த விமானம் ஒன்றில் பயணம் செய்த  தைவான் நாட்டின் கர்ப்பிணி பெண் ஒருவர், பயணத்தின்போது திடீரென பிரசவ வலி வந்ததால், அங்கிருந்த டாக்டர் ஒருவரின் உதவியால் குழந்தை பெற்றார். இதனால் அமெரிக்க எல்லைக்குள் சென்ற விமானம் மீண்டும் தைவானுக்கு திருப்பப்பட்டது.

இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்தபோதும் அதை மறைத்து விமானத்தில் அந்த பெண் பயணம் செய்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து அமெரிக்கா சென்ற விமானத்தை மீண்டும் தைபே நகருக்கு திருப்ப காரணமாக இருந்த பெண்ணிடம் இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவரிடம் 33,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 21 லட்ச ரூபாய்) நஷ்ட ஈடு கோரப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

English Summary:Taiwanese woman faces hefty bill after diverting flight to Alaska to give birth

Leave a Reply