தமெரிக்கா டிவி: அமெரிக்காவில் மதுரை தமிழரின் முதல் தமிழ் ஒளிபரப்பு சேனல்
அமெரிக்காவில் தமெரிக்கா டிவி என்ற புதிய சேனலை மதுரையை செர்ந்த தமிழர் ஒருவர் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் தொடங்கப்படும் முதல் தமிழ் சேனல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ் என்ற அமெரிக்காவில் வாழும் மதுரையை சேர்ந்த தமிழர் இசை, கதை, கவிதை, சினிமா என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார். மக்கள் அதிகமாக விரும்பும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தமெரிக்கா டிவி மூலம் வழங்கி வருகிறார்.
தவிர, சிறு, குறு படங்களை தயாரித்து வெளியிடுகிறார். அவை மதுரைக்கு புகழ் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயில், எந்நேரமும் உழைக்கும் மக்கள், மனதை மயக்கும் வாசம் மிகுந்த மல்லிகைப்பூ , என அனைவரிடத்திலும் ஒரு அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தமெரிக்கா டிவி, அமெரிக்காவின் முதல் தமிழ் ஒளிபரப்பு சேனல்.மக்களுக்கு மிகவும் விருப்பமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் இந்த சேனல் முதன்மை பெறுகிறது. இசைஞானி இளையராஜாவின் ரசிகர்ளை இணைக்கும் அவரின் பிறந்தநாள் இசை நிகழ்ச்சியாக அவர் தொகுத்து அளித்தது அருமை.
தவிர, ஜல்லிக்கட்டு போராளிகள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவை குடுத்து நடந்த நிகழ்வுகளை பல மாகாணங்களில் இருந்து ஒளிபரப்பினார்கள். அமெரிக்காவில் உள்ள பல தமிழ்சங்கம், தமிழ் பள்ளிக்கூடம், கோவில்களில் நடக்கும் நிகழ்வுகள் உடனடியாக ஒளிபரப்புகிறார்கள்.