சமீபத்தில் நடிகைகளின் நிர்வாண படங்கள் மற்றும் டாப்லெஸ் படங்கள் இணையத்தில் கசிவதும் அதற்கு நடிகைகள் அதில் இருப்பது நாங்கள் அல்ல, அது மார்பிங் மற்றும் போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் என்றும் பதிலளிப்பதும் வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சையில் சமீபத்தில் சிக்கிய நடிகை ராதிகா ஆப்தே, ஹாலிவுட் படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நடிகை ராதிகா ஆப்தே ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே அறிந்த செய்திதான். ஆனால் அந்த படத்தில் அவர் முழு நிர்வாணமாக நடித்துள்ளாராம். இதை அவர் மறுக்கவும் இல்லை. ஆனால் இந்த நிர்வாண காட்சியில் இந்தியாவில் படம் வெளியாகும்போது நீக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்ததாகவும், இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் மட்டுமே தனது நிர்வாண காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளனர்.
மேலும் செக்ஸ் குறித்து ஒருவரிடம் பேசுவதே குற்றம் என்று இங்கு அனைவரும் தவறாக கருதி வருகின்றனர். செக்ஸ் குறித்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோ அல்லது செக்ஸ் வைத்துக்கொள்வதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இதில் மற்றவர்கள் தலையிடுவது அநாகரீகமானது என்று கூறியுள்ளார்.
ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன், ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.