துபாய் விமான நிலையத்தில் தமிழ் மொழி அறிவிப்பு

துபாய் விமான நிலையத்தில் தமிழ் மொழி அறிவிப்பு

dubai airportஉலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் மிகவும் முக்கியமான விமான நிலையம் துபாய். மாதம் ஒன்றுக்கு சுமார் 70 லட்சம் பயணிகளுக்கும் மேல் இங்கு வருகின்றனர். இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து துபாய் விமான நிலையம் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நால் பெருகி கொண்டே உள்ளது.

மேலும் துபாயில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். அவர்களில் 20% குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சென்னை சென்று வருவதும், இவர்களை பார்க்க இவர்களது குடும்பத்தினர்களும் வருகை தருவதால் இந்த விமான நிலையத்திற்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை-துபாய் விமான சேவையை அளித்து வரும் எமிரேட் நிறுவனம் ஏற்கனவே ஆங்கிலம், இந்தி, உருது, அரபி ஆகிய மொழிகளில் அறிவிப்புகளை செய்து வரும் நிலையில் தற்போது தமிழிலும் அறிவிப்பு செய்து வருகிறது.

பயணிகள் விமானத்தில் ஏறும்படி கேட்டுக்கொள்வது, பயண டிக்கெட்டை உரியவரிடம் காட்ட தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவது, நுழைவு வாயில் எண் ஆகிய அறிவிப்புகளை தமிழில் இந்த விமான நிறுவனம் செய்வதால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தங்களது விமானத்தை பயணத்திற்காக தேர்வு செய்த தமிழர்களுக்கு நன்றி’ என்றும் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply