‘நேற்று சார்லி ஹெப்டோ, நாளை தினமலர்’. பின்லேடன் படத்துடன் வந்த மிரட்டல் கடிதம்.

Dinamlarபிரபல தமிழ் நாளிதழான தினமலருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, ‘ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட ஒரு மிரட்டல் கடிதம் தினமலர் நாளிதழின் அலுவலகத்திற்கு வந்துள்ளதாகவும், அந்த கடித்ததில் ‘நேற்று பாரீஸின் சார்லி ஹெப்டோ, நாளை தினமலர்’ என்ற வாசகம் இருந்ததாகவும் அந்த கடிதத்தின் பின்னணியில் இந்திய வரைபடம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த கடிதம் 3/10 உக்கடம், கோவை, தமிழ்நாடு, இந்தியா என்ற இடத்தில் இருந்து வந்துள்ளதாகவும், இந்த லட்டரின் கீழ்புறம் பின்லேடன் படம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அல்கொய்தா பெயருடன் மேலும் சில அரேபிய எழுத்துக்களுடன் கூடிய கையெழுத்தும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த லட்டர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது உண்மையான மிரட்டலா? அல்லது விஷமிகள் யாரேனும் செய்யும் விளையாட்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது தினமலர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Leave a Reply