தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 1101 இடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு/10ம் வகுப்பு/ பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. கால்நடை ஆய்வாளர் நிலை-2 :
292 இடங்கள்.
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சி.
சம்பளம்:
ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
2. கதிரியக்கர் (ரேடியோகிராபர்).
24 இடங்கள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியாலஜிக்கல் அசிஸ்டென்ட் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். இத்தகுதியுடன் இயற்பியல் பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. ஆய்வக உதவியாளர் (லேபரட்டரி அசிஸ்டென்ட்):
17 இடங்கள்
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி.
4. லேபரட்டரி டெக்னீசியன்:
3 இடங்கள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி நடத்தும் 12 மாத கால லேபரட்டரி டெக்னீசியன் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
5. எலக்ட்ரீசியன்:
3 இடங்கள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் ஒயரிங் டிரேடில் பாலிடெக்னிக்கில் அல்லது ஐடிஐயில் ஒரு வருட கோர்ஸ்.
6. அலுவலக உதவியாளர்:
36 இடங்கள்.
தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி.
7. கால்நடை பராமரிப்பு உதவியாளர்:
725 இடங்கள்.
தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு:
அனைத்து பணிகளுக்கும் 1.7.2015 அன்று 18 லிருந்து 30க்குள். 1 முதல் 5 வரையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மூலமும், 6 மற்றும் 7 ஆகிய பணிகளுக்கு நேர்காணல் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100/-இயக்குநர், கால்நடை பராமரிப்பு (ம), மருத்துவப்பணிகள், சென்னை-6 என்ற ெபயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, அருந்ததியர், எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பத்தை www.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Department of Animal Husbandry and Medical Services,
Central Office Building,
Block-II, DMS Complex,
CHENNAI- 600006.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.9.2015.