மார்ச் 25ஆம் தேதி தமிழக பட்ஜெட். புதிய சலுகை அறிவிப்பு இருக்குமா?

tn budgetதமிழக சட்டசபையில் மார்ச் 25ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இருக்குமா? என்பது குறித்து இப்பொழுது முதலே சாதாரண குடிமகன் முதல் தொழிலதிபர்கள் வரை பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் , 2014-2015-ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை நிதிநிலை அறிக்கை ஆகியவை இந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ன்கீழ், 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் புதன்கிழமை அன்று தாக்கல் ஆகும்.

2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 2015-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் நாள் சனிக்கிழமை அன்று முன்வைக்கப்படுகின்றன.

2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பேரவைக்கு கிடைக்கும்” என்று ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply