பிழையில்லாமல் வாக்காளர் பட்டியலை தயாரிப்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் குறித்து கலந்துரையாட இன்று தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை மாநில தேர்தல் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ்,பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் அடையாள எண்ணை இணைப்பது, வாக்களர் பட்டியலில் முழுமையாக திருத்தம் கொண்டு வருவது, பிழையில்லாமல் வாக்களர் பட்டியலை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சந்தீப் சக்சேனா எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் நிலைப்பாடுகளை கேட்டறிந்தவுடன் இதுகுறித்து தனது அறிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சந்தீப் சக்சேனா அனுப்புவார் என கூறப்படுகிறது.