டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்.
தலைநகர் டெல்லியில் கடந்த 28 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் இதுவரை அரைநிர்வாணம், எலிக்கறி சாப்பிடுவது, அங்கபிரதட்சணம் செய்வது, பாதி மீசையை எடுப்பது போன்ற விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது உச்சகட்டமாக நிர்வாண போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணமாக தரையில் படுத்து உருண்ட தமிழக விவசாயிகளை டெல்லி காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: பிரதமரை இதுவரை சந்திக்க வழியில்லை என்பதால் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டோம். பிரதமரை சந்திக்க வழி ஏற்படுத்தி தருவதாக கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர்’ என்று கூறினார்.