இன்றுமுதல் மலிவு விலை “அம்மா உப்பு”. ரூ.14க்கு அயோடின் கலந்த சுகாதார உப்பு.

7A copyமலிவு விலை அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா காய்கறிகள் ஆகியவற்றை தொடர்ந்து இன்று முதல் மலிவு விலையில் ‘அம்மா உப்பு’ விநியோகத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

 மலிவு விலை ‘அம்மா உப்பு’ தமிழகத்திலுள்ள அமுதம் சிறப்பங்காடி, சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மற்றும் கூட்டுறவு துறை நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும். இந்த விற்பனையை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

 ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் என்ற கிராமத்தில் அம்மா உப்பு தயாரிப்பதற்காக அரசு உப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இங்கு முதல் கட்டமாக 100 டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உப்பில் இரும்பு மற்றும் அயோடின் உப்பு, மற்றும் சுத்திகரிக்கப்பட்ட அயோடின் உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என மூன்று வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 தமிழக அரசின் அம்மா அயோடின் கலந்த முதல் வகை உப்பு ரூ.14, இரண்டாவது வகை உப்பு ரூ.10 மற்றும் குறைந்த அளவு சோடியம் உப்பு ரூ.21க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1l6tyTr” standard=”http://www.youtube.com/v/EzRx3_F-fA4?fs=1″ vars=”ytid=EzRx3_F-fA4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7915″ /]

Leave a Reply