தமிழக எம்.எல்.ஏக்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி
ஒருபக்கம் கடுமையான தண்ணீர் பஞ்சம், இன்னொரு பக்கம் விவசாயிகளின் தற்கொலை, இவை மட்டுமின்றி கதிராமங்கலம் பிரச்சனை, என தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்
கூவத்தூரில் சேவை, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழலில் முதலிடம் என கமல் கூறியது உள்பட ஒருசில விஷயங்களால் தமிழக அரசின் மீது கடும் அதிருப்தியில் பொதுமக்கள் இருக்கும் நிலையில் தற்போது எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை உயர்த்தும் அரசின் அறிவிப்பு அனைவரையும் ஆத்திரத்தை வரவழைத்துள்ளதாக டுவிட்டரில் பதிவாகும் கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது.