சென்னையில் சனி, ஞாயிறு கொட்டப்போகுது மழை: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மீண்டும் அதாவது சனி, ஞாயிறில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்

இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஜனவரி 31 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு சற்று குளிர் அதிகமாக காணப்படும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்

மேலும் டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி உள்பட ஒருசில மாவட்டங்களில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்