தமிழ்கன் அட்மின் திடீர் கைது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் விசாரணை

தமிழ்கன் அட்மின் திடீர் கைது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் விசாரணை

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் பதவியேற்ற நடிகர் விஷால் தயாரிப்பாளர்களின் பிழைப்பை நசுக்கி வரும் தமிழ்கன் அட்மினை கண்டுபிடிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விட்டது அனைவரும் அறிந்ததே

அந்த வகையில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் தமிழ்கன் அட்மின் மற்றும் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரையும் திருவல்லிக்கேணி D1 காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இருப்பினும் தமிழ்கன் இணையதளத்திற்கு பல அட்மின்கள் இருப்பதாகவும் இவர் ஒருவரை கைது செய்வதால் மட்டும் அந்த இணையதளத்தை முடக்க முடியாது என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply