தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம். 3 பேர் கைது
புதிய திரைப்படம் ஒன்று வெளிவந்தால் திரையரங்குகளில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கையைவிட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்து வந்தது. அந்த அளவுக்கு சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என எந்த படமாக இருந்தாலும் ரிலீஸ் ஆன மாலையே அந்த படங்கள் தமிழ் ராக்கர்ஸில் இடம்பெற்றுவிடும்
இதற்கு ஒரு முடிவே இல்லையா? என திரையுலகினர் இருந்த நிலையில் ஒருவழியாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். கோவையில் இருந்து இந்த இணையதளம் செயல்பட்டதாகவும், ஆனால் வெவ்வேறு ஐபி முகவரியில் இருந்து செயல்பட்டதாகவும் கூறப்பட்ட இந்த இணையதளத்தை தற்போது காவல்துறையினர் முடக்கியதோடு, அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த மூன்று ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.
ஆனாலும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செயல்படவில்லை என்பது மட்டும் உண்மை