சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார். அவருக்கு வயது 86. சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த அசோகமித்ரன், சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு காலமானார்.

தியாகராஜன் என்ற இயற்பெயரை கொண்ட அசோகமித்ரன், ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் 16 ஆண்டுகாலம் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியவர், கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராகிய அசோகமித்ரன் பல சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்கள் என எழுதியுள்ளார்.  இவரது எழுத்துக்கள் கள் தமிழ் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

1996-ஆம் ஆண்டு ‘ அப்பாவின் சிநேகிதர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றார். கடந்த 2013- ஆம் ஆண்டு சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழக அரசின் திரு.வி.க விருதையும் பெற்றார். இவருடைய பல படைப்புகள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் மரணம் தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

அசோக்மித்ரன் மறைவிற்கு கமல்ஹாசன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், திலகவதி ஐபிஎஸ் உள்பா பலர் இரங்கல் தெரிவித்துள்ளன.

Leave a Reply