பழம்பெரும் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.
ஞானபீட விருது பெற்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவ்வப்போது உடல்நிலை மோசமாகி வருவது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை திடீரென மிக மோசமானதால், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2002- ஆம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாதமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
ஜெயகாந்த எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவல் தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது.