முதல் மொழியாம், தன்னிகரற்ற மூத்தமொழியாம், ஞானமளிக்கும் மொழியாம், தத்துவார்த்த மொழியாம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வல்லதும், தன்னைக் கற்போரை காப்பாற்றும் வல்லமை மிக்கதுமான உயிர் மொழியாம், ஞானத்தலைவன் தவத்தால் தோன்றிய தனி மொழியாம் , தமிழை கற்பவர் இகவாழ்வாகிய இல்லற வாழ்விற்கு தேவையான பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் இனிவரும் ஞானசித்தர் காலமதனிலே உறுதியாகப் பெறலாம் என்பதையும், இகவாழ்வைத் தருகின்ற தமிழே ஞானமாய் மாறி ஞானம் அளித்து பரவாழ்வையும் தரும் என்ற பேருண்மையை அறிவதோடு ஞானம் பெற வேண்டுமாயின் அது எவராயினும் சரி தமிழைக் கற்றால்தான் வரமுடியும் என்பதையும் அறியலாம். இனிவரும் காலமெல்லாம் தமிழே உலகை ஆட்சி செய்யும்.
ஆதலினாலே ஞானயுகமாம் தமிழ் யுகத்தினிலே தமிழே தலைமை மொழியாய் விளங்கி நிற்குமாதலால் தமிழை கற்றோரும், கற்போரும் அடையும் பெரும்பேற்றை என்னவென்று சொல்வது. முருகப்பெருமானார் ஆசியால் வேதமொழியாம், ஞானமளிக்கும் மொழியாம் தமிழைக் கற்போர் ஞானம் பெற தகைமை பெறுவார் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் தமிழ் கடவுள் என்பதையும் அவரே ஞானத்திற்கும் தலைவன் என்பதையும் அறியலாம்.