தமிழகம் முன்னேற முதலில் திமுகவையும், பின்னர் அதிமுகவையும் வீழ்த்த தமிழருவி மணியன் யோசனை

தமிழகம் முன்னேற முதலில் திமுகவையும், பின்னர் அதிமுகவையும் வீழ்த்த வேண்டும். தமிழருவி மணியன்
tamilaruvi
திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி குறித்த ஆலோசனை ஒன்றை சமீபத்தில் வழங்கிய காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன்,  திமுகவை முதலில் வீழ்த்தி 2-ம் இடத்தை பிடித்து, அதன்பின்னர் அதிமுகவை வெல்லும் சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ” இன்றைக்கு அதிமுகவின் வாக்கு வங்கி 35 சதவீதமாகும். ஆனால், திமுகவின் வாக்கு வங்கி 20 சதவீதமாகவுள்ளது. எனவே, தேமுதிக, மதிமுக, பாமக. இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து திமுகவை முதலில் வீழ்த்தலாம். ஒரு வேளை அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால், அதிமுகவின் தவறுகளை எதிர்ப்பது யார் என்ற வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடத்தை இந்த புதிய கூட்டணியால் எளிதில் நிரப்ப முடியும். எனவே, திமுகவை வீழ்த்துவதன் மூலம் மக்கள் நலனுக்காக போராடும் கட்சிகள் 2-ம் இடத்துக்கு வந்து அதிமுகவை வெல்ல முடியும். தமிழகம் முன்னேற முதலில் திமுகவும், பின்னர் அதிமுகவும் வீழ்த்தப்பட வேண்டும்’ என்று கூறினார்.

இந்த பேட்டியில் இருந்து இந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும் என அவர் மறைமுகமாக கூறுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply