திமுக தான் முதல் எதிரி! கட்டம் கட்டி அட்டாக் செய்யும் பாஜக
தமிழக அரசியலில் தற்போது பாஜக தான் ரேஸில் முந்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாக உடைந்த அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அடுத்த தேர்தலில் இருக்காது என்றும், திமுக மீதான வெறுப்பும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை என்றும் கூறி வரும் அவர்கள், பொதுமக்களின் அடுத்த சாய்ஸாக பாஜகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை மனதில் வைத்து கொண்ட பாஜக, எப்படியும் அதிமுகவின் இரு அணிகளில் ஒரு தனி தன்னுடைய பக்கம் தான் என்பதால், தனக்குண்டன எதிரியை முதலில் இனம் கண்டுகொண்டது பாஜக. அதுதான் திமுக. இதன்காரணமாக இப்போது முதலே திமுகவை அட்டாக் செய்ய தொடங்கிவிட்டார்கள் பாஜக தமிழக தலைவர்கள்
இதன்படி நேற்று ‘தூய்மை இந்தியா’ திட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ‘மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டவில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு தமிழகத்தில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி, மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. தமிழக அரசியல் நாகரிகம் அதல பாதாளத்திற்கு போய்கொண்டிருக்கிறது’ என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல இன்னொரு விழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி தமிழர்கள் பகுதிக்கு சென்றது மகிழ்ச்சியான ஒன்று. புதுச்சேரி அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும். 50 ஆண்டுகளில் தி.மு.க என்னென்ன துறைகளில் என்னென்ன செய்தது என்று கூற வேண்டும். தி.மு.க தன்னை பலப்படுத்துவதாக காட்ட முயற்சி செய்கிறது. தி.மு.க செய்யும் பாசாங்கு பலிக்காது. தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறது’ என்று கூறினார்.