காவிரிக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமாவா? தமிழிசை கிண்டல்

காவிரிக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமாவா? தமிழிசை கிண்டல்

நேற்று காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது காவிரி விவகாரத்திற்காக தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்யும் திட்டம் ஒன்றை கூறினார். இந்த திட்டத்தை ஏற்கனவே நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் கிண்டல் செய்துள்ளார்.

திமுகவுக்கு தமிழகத்தில் ஒரு லோக்சபா எம்பி கூட இல்லை. கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுக, கைவசம் ஒரு எம்பி கூட இல்லாமல் இந்த திட்டத்தை அறிவித்திருப்பது நகைச்சுவைக்கு உரியதாக கருதப்படுகிறது. மேலும் ராஜ்யசபாவிலும் திமுகவுக்கு 4 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுநீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வாரேன், ரெண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற கதையாக இருக்கின்றது ஸ்டாலின் சொல்வது என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் திட்டம் குறித்து தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ;காவிரிக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலின் கூறுவது கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது போலவா? என்று கூறியுள்ளார்.

Leave a Reply