கமல்ஹாசனின் திராவிட விளகத்திற்கு தமிழிசை பதிலடி
முரசொலி நாளிதழின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு திராவிடம் என்பது தேசியம் தழுவியது என்று ஒரு விளக்கத்தை கொடுத்தார். கமல்ஹாசனின் இந்த விளக்கத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தேசியத்தோடு சேர்ந்த திராவிடத்தால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழிசை மேலும் இதுகுறித்து கூறியபோது, ‘“தேசியத்தோடு சேர்ந்த திராவிடத்தால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர முடியும் என்றும், மாநில அக்கறையையும் தேசியத்தையும் நடிகர் கமல்ஹாசன் பிரித்து பார்க்கக்கூடாது என்றும் தமிழிசை செளந்திரராஜன் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ரஜினியை தன்மானம், தற்காப்பு என்று மறைமுகமாக கமல் தாக்கியதை அடுத்து ரஜினி ரசிகர்கள் கமல்ஹாசனை டுவிட்டரில் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.