பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் அரசில் ஏன் பங்கேற்றீர்கள். திமுகவுக்கு தமிழிசை கேள்வி

பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் அரசில் ஏன் பங்கேற்றீர்கள். திமுகவுக்கு தமிழிசை கேள்வி

சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு கட்சி பேதமின்றி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவுக்கு மட்டும் அழைப்பு விடுவிக்கப்போவது இல்லை என்றும், இந்த விழாவில் மதவாத கட்சிகளுக்கு இடம் கிடையாது என்றும் திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பாஜக தமிழக தலைவர் இன்று பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “திமுகவிடம் அரசியல் நாகரிகம் கிடையாது. பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏன் திமுக கூட்டணி வைத்தது? தமிழகத்தில் அரசியல் நாகரிகம் வளர்ந்தது என்று நினைத்தோம் ஆனால் அது தவறு” என்பதை புரிந்து கொண்டோம்’ என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில் ஏழு மாநில முதல்வர்கள் மற்றும் சோனியா காந்தி, லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply